நாயக்கர் அய்யா....நீங்க நல்லவரா கெட்டவரா???
Friday, September 10, 2010
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நம்ம மணி சார்-உலகநாயகன் கூட்டனியில் வந்த நாயகன் படத்தைப்பத்தி'னு தப்பா நினச்சுக்க கூடாது. இது நான் சென்னை வந்தவுடன் சிரிது காலம் என் நண்பன் சான் (Chan) உடன் ராமாபுரம் பகுதியில் தங்கியிருந்தேன் அந்த வீட்டின் இல்லை குடோனின்..இல்ல இல்ல புறாக்கூண்டின் உரிமையாளர் நாயக்கர் அய்யாவைப் பற்றியது.
சில அழகிய தமிழ் சினிமாக்களின் பாதிப்பில் (க்ர்ர்ர்ர்ர்..அந்த எமாற்றத்தோட கொலை வெறி லைட்டா இன்னும் உள்ள இருக்கு) வீட்டில் அடம்புடிச்சு (நடிச்சா ஹீரோ தான் சார்) படிச்சா சென்னையில தான்'னு ரகளை பண்ணி கலந்தாய்வுக்கு கூட வீட்டில யாரையும் அழைச்சுட்டு வராம நண்பன் சான் சென்னையில இருக்கானு அவன கூட்டிட்டு போய் ஒரு வழியா சென்னை கல்லூரியிலே சேர்ந்த்தேன், புதிய ஊரில் வெளியில் எங்கும் தங்க பிடிக்காம கல்லூரிக்கு தூரமா இருந்தாலும் சானுடனே வந்து தங்கிவிட்டேன். நாங்கள் தங்கியிருந்த நாயக்கர் பேலஸிலிருந்து என் கல்லூரி செல்ல இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும். முதல் நாள் பயணத்திலேயே ஒரு விசயம் நல்லா புரிஞ்சுது சென்னை பேருந்துகள்ல பயணம் செய்யனும்னா ஒன்னு செத்த பிணம் மாதிரி எந்த உண்ர்ச்சியும் இல்லாம எல்லாத்தையும் சகிச்சுட்டு இருக்கனும் இல்லை ஏதாவது சர்க்கஸ்ல சேர்ந்து நல்லா சாகஸம் பண்ண கத்துக்கிட்டு வரணும்னு. மணுஷன் குரங்கில இருந்து தான் வந்திருப்பான்னு அன்னைக்கு தான் நான் நிச்சயமாக நம்பினேன்...பேருந்து கிளம்பும் வரை அமைதியா டீஸன்டா நின்னுட்டு இருந்த சில கூட்டம் கிளம்பிய உடன் தரையில இருக்க மண்ணை கையில அள்ளி பூசிட்டு அப்படியே ஓடி வந்து லாவகமாக சிலர் படியிலும்..சிலர் ஜன்னல் கம்பிகளிலும்..இன்னும் சிலரோ கால் அந்தரத்தில் மிதக்க வெரும் ஒற்றை கையின் பிடியில் தொங்கி படு ஜாலியா வந்தனர்..(ம்ம்..என்ன ஒரு சாதுர்ய்யம்..). இந்த வித்தையெல்லாம் எப்பொ கத்துட்டு கல்லூரி ஒழுங்கா போரதுனு யோசிச்சு ( இல்லை'னா மட்டும்.......!) ஊரில அம்மாகிட்ட ஏகப்பட்ட பிட்ட போட்டு விக்ரமன் படங்களின் சில லா..லா..லா...ல்லா..லால.. பின்னனி இசையுடன் செண்டிமென்டுகளை தாக்கி ஊரில் இருக்கும் என்னோட பைக் ( நண்பர்கள் வட்டாரத்தில் அதுக்கு லக்ஷ்மி'னு பேர்) சென்னைக்கு எடுத்து வந்துட்டேன்.
என் லக்ஷ்மியப் பத்தி நானே பெருமையா சொல்லக்கூடாது, இருந்தாலும் உங்களுக்கு ஒரு சிறு அறிமுகம்..80 களில் பிரபலமான இந்துசுசுக்கி வண்டி அது, அதை நான் 2002'களில் சென்னயில் (தைரியமாக) ஓட்ட எடுத்து வந்துவிட்டேன் என்ன தான் நான் அதுக்கு புது பெயின்ட் அடிச்சு அழகா புது வண்டி மாதிரி சுசுக்கி மேக்ஸ் 100 எல்லாம் எழுதி வெச்சாலும் போக்கிரி பட பாடிசோடா மாதிரி எந்த கெட்டப் போட்டாலும் நம்ம போலீஸ் மாமாக்கள் மடக்கிடுவாங்க அப்புறம் தான் தெரிந்தது என் வண்டி நம்பர் தான் அந்த எட்டப்பன்னு வண்டி நம்பர் எல்லாம் புதிய வடிவத்துக்கு வந்து பல காலம் ஆச்சு (TN XX ..XXXX.) ஆனா லக்ஷ்மியின் நம்பரோ அரதப்பழைய வடிவத்தில் இருக்கும் (TCC XXXX). லக்ஷ்மிய பார்த்தாலே மாம்ஸ் எல்லாம் குதூகளம் ஆகிடுவாங்கனா பார்த்துக்கோங்களேன்..எப்படியும் ஒரு சின்ன அமெளன்டாவது தேறும்ங்கிர நம்பிக்கை.
நம்ம கதையின் நாயகன் நாயக்கரய்யா ராமாபுரம் தோட்டத்தில எம்.ஜி.ஆர் கிட்ட எடுபுடி/அடியாளா வேலை பார்த்தவர். மனசுக்குள்ள கருப்பு எம்.ஜி.ஆர் 'ங்கிற நினப்பு எல்லாரையும் அய்யா/நாயக்கரய்யா என்று கூப்பிட வெச்சு நாயகன் கமல் ஃபீலிங்கில சுத்துரவர். மாலை 6 மணியானதும் சரக்க போட்டு அந்தப்பக்கம் மாட்டினவங்கள புடிச்சு தன்னோட பெருமைகளையும் சில எம்.ஜி.ஆர் பற்றி கதைகளையும் மொக்கை போட்டு சரளமாக ஏகத்துக்கும் கெட்டவார்த்தைகள் பேசுவதும் தான் பொழுது போக்கு. நானும் சில நாட்கள் அவரது வரலாற்று பெருமை மொக்கைகளுக்கு சிக்கியுள்ளேன் நண்பன் சானும் அய்யா அந்த ஏரியாவின் ஒரு முக்கிய பிரமுகர்'னு சொல்லி வெச்சிருந்தான். ஒரு நாள் காலையில் லக்ஷ்மி'க்கு ஏதோ கோளாறு வர அருகில் இருந்த மெக்கானிக்கிடம் விட்டு வந்தேன் அவரும் 2 மணி நேரம் கழிச்சு வந்து எடுத்துக்க சொன்னார், வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் நாயக்கர் விசயத்தை அறிந்து மெக்கானிக் எமாற்றி விடுவான் அய்யா வீட்டில இருந்து வர்ரேன் அவர் தான் விட சொன்னார்'னு போய் சொல்ல சொன்னார். நானும் போய் சொன்னேன் உடனே மெக்கானிக் தனது உதவியாளிடம் ஏதோ பேசிட்டு நீ சாயந்திரமா வந்து வண்டிய வாங்கிக்கோ அத்தோட ஒரு தொகையும் எடுத்து வர சொன்னார், என்ன இது 2 மணி நேரத்தில் இருந்து மாலை'க்கு மாத்திட்டீங்கனு கேட்டேன், அய்யா வீட்டு வண்டியாச்சே அதனால பக்காவா எல்லாம் செய்து தர்ரேன் என்றார் நண்பன் சானும் 'ஆமாடா இல்லைனா அய்யா அவரை திட்டுவார்'னு சொன்னான் அவன் சொன்னதும் தான் புரிஞ்சுது தெரியாதவங்கனா சும்மா ஏனோதானோனு செய்வாங்க'னு. மாலை 6 மணியளவில் மெக்கானிக் கேட்ட சில நூறு ரூபாய்களில் அய்யா பேரச்சொல்லி மறுபடி மிரட்டி சில பத்துகளை குறைச்சுட்டு லக்ஷ்மிய எடுத்துட்டு சானுடன் முதன்முதலா பைக்கில் திநகர் கிளம்பினோம்.
சென்னை பேருந்துப் பிசாசுப் பிடியிலிருந்து தப்பித்து லக்ஷ்மி என்னும் தேவதையின் மேல் ஏறி சுதந்திரமாகப் பறப்பதாய் உணர்ந்தேன். வடக்கு உஸ்மான் தெருவில் ஒரு சிக்னலில் நின்றோம் அப்பொழுது 3 சிறுவர்கள் ஒரு மொபட்டில் வந்து மாம்ஸிடம் மாட்டியிருந்தனர் சிக்னலில் நிற்கும் நேரம் பாண்டி பஜார் வழி கேட்டுக்களாம்னு நினச்சு வண்டிய நகர்த்தி போய் மாம்ஸ் அருகில் நின்று வழி கேட்டேன் (..ஊர்ல பெருசுங்க சொல்லி விட்டிருக்காங்களாச்சே..மெட்ராஸ்ல ஏமாத்திடுவாங்க கண்ணு எப்பவுமே சூதாணமா இருக்கோனும் , டிராவிக் போலீஸ் எல்லாப் பக்கமும் இருப்பாங்க அவங்க கிட்ட தான் வழி எல்லாம் கேட்டு போகனும்னு..) மாம்ஸும் ஏற இறங்க பார்த்துட்டு வழி சொன்னார். சிக்ன்ல் விழும் வரை டைம்பாஸ் ஆகனுமேனு நானும் சானும் மாம்ஸிடம் பேச்சுக் கொடுத்தோம் 'சின்னப் பசங்களா இருந்துட்டு பீக் ஹவரில டிரிபிள்ஸ் வர்ராங்கனு' சான் ஆரம்பிக்க, என் பங்குக்கு ' என்னங்கண்ணா ஓட்டுனர் உரிமமும் (லைஸன்ஸ்) இல்லைங்க போல' என்றேன். எரிச்சலாய் எங்க பக்கம் திரும்பினவர் ஏதையோ பார்த்து ஒரு வெற்றிப் புண்ணகை சிந்தினார்..(யெஸ் அவர் கண்கள்ள ஒரு தேஜஸ் தெரிஞ்சது) பிரதர்ஸ் கொஞ்சம் அப்படியே ஓரங்கட்டுங்க பேசிக்கலாம்னு அந்த சின்னப் பச்ங்க பக்கத்தில நிற்க வெச்சுட்டு, உங்க டாகுமென்ட்ஸ் காட்டுங்க அதாவது ஓட்டுன்ர் உரிமம், வண்டி காப்பீடு, பதிவுச்சான்றிதழ், மாசு சான்றிதழ்'னு, எஃப்.சி'னு அடுக்கிட்டே போனார்(வேறொன்னுமில்ல லக்ஷ்மி நம்பர பார்த்துட்டார் அதான் அந்த ரியாக்ஸன்). ஆஹா சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி ஆயிடுச்சேனு ஏதோ இருக்கிர காகிதங்கள பொறுக்கி காண்பிச்சோம். நான் கேட்டதுல பாதி கூட இல்லை என்ன விளையாடுறீங்களா என்றார்..நீங்க சொல்ற அந்த மீதமுள்ள சான்றிதழ்கள்'னா என்னனு கூட தெரியாது சார்'னு பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்ச அவரோ நாங்க எல்லாம் ஸ்டிரிக்ட் ஆபிஸர்ஸ்'னு விரப்பா நின்றார். 20 வருடப் பழைய வண்டி, அதுவும் 2 ஸ்டிரோக் நான் சொன்ன எல்லாமே கண்டிப்பா வேணும்னு அடம் பிடிக்கிறார். உடன் இருந்த இன்னொரு மாம்ஸ் என்னை தனியா கூப்பிட்டு 250 ரூபாய் கொடுத்துட்டு போங்க சார்கிட்ட சொல்லி விட்டுடலாம் என்றார் நானும் துண்டு போடாத குறையா பேரம் பேசி 100 ரூபாயில் முடிச்சு நண்பன் சானிடம் சொன்னேன் கடுப்பாகிப் பேன அவனோ 'எதுக்குடா பணம் தரனும்னு' வெகுண்டு எழுந்து சார் நாங்க ராமாபுரம் மூன்லைட் ஏரியா நாயக்கர் அய்யா வீட்டுல இருந்து வர்ரோம்' என்றான் கோபமாக, எனக்கா ஒரே சந்தோஷம், பெருமிதம்..பாட்ஷா படத்தில தலைவர் சொல்லுவாரே 'எனக்கு இன்னொரு பேர் இருக்குனு' அந்த காட்சி எல்லாம் மனதில் ஓடியது. இரு மாம்ஸும் சற்றே யோசித்தனர் அருகில் நின்றிருந்த சிறுவர்களையும் பார்த்தனர். நானோ நிலமைய புரிஞ்சுக்கிட்ட மாதிரி மெதுவாக ஒரு மாம்ஸிடம் 'சார் அந்த பசங்க முன்னாடி எங்கள மட்டும் எப்படி விடுவதுனு பார்க்காதீங்க எதாவது சொல்லி எங்கள அந்த பக்கமா கூட்டி போங்க அங்கிருந்து நாங்க போயிடுரோம் என்றேன்'. வெறியேரியவராய் காட்சியளித்த இரு மாம்ஸுகளும் வண்டி சாவியை பிடுங்கி விட்டு அது வரை மரியாதையாய் பேசியவர்கள் கண்டபடி 'டா' போட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க. என்ன ஆச்சுனு நாங்க ரெண்டு பேரும் யோசிக்கும் போதே ஒரு மாம்ஸ் சொன்னார் 'மவனே எவன்டா அந்த ராமாபுரம் நாயக்கன் நானும் அந்த ஏரியா பக்கம் தான்டா இனி உங்க வண்டி வேனும்னா அந்த நாயக்கன் வந்தா தான்டா தருவேனுட்டார்'. அப்பவும் மனம் தளறாத சான் 'வாடா அய்யாவுக்கு போன் பண்ணுவோம்' என்றான். இந்த கலவரத்தில் அந்த சின்னப் பசங்கள மறந்துட்டோம்னு திரும்பி பார்த்தா ஏதோ ஒரு புழுவை பார்ப்பது போல எங்களை பார்த்துட்டு வாய் தவிற மற்ற எல்லா வழிகளிலும் சிரிப்பதை உணர முடிந்தது. சொந்த செலவில சூனியம் வெச்சுக்கிறது'னா இது தானு புறிஞ்சுக்கிட்டு மேலும் அசிங்க பட விரும்பாமல் மாம்ஸிடம் கெஞ்சி கூத்தாடி அவர் கேட்ட 250 ரூபாய் பணம் கொடுத்து (அவ்வளவு பேரம் பேசி 100 ஆக்கினது எல்லாம் வீணா போச்சு) வண்டியை மீட்டு திநகர் போகாமலே வீடு கிழம்பினோம்.
அய்யா மேட்டர் ஏன் அப்படி ஆனது என்று புரியாமலே வீட்டு அருகில் உள்ள ஒரு பரோட்டா கடையில் சாப்பிட சென்றோம் அப்போ அங்கே அந்த மெக்கானிக்கின் உதிவியாள் பையனும் இருந்தான் அவன் எங்களிடம் நல்லா பேசுவான் அதனால பேச்சு வாக்கில் நடந்ததை சொல்ல அவனோ வயிறு வலிக்க சிரித்தவனாய் சானைப் பார்த்து 'அவர் தான் புதுசு உங்களுக்குமா அந்த டுபாக்கூரைப் பத்தி தெரியாது என்றான்'. அந்த ஆள் பேரச்சொன்னா சும்மா போர நாய் கூட நேரா வந்து மூஞ்சியில மூச்சா போய்ட்டு போகும். அவ்வளவு இத்துப்போன சின்னப்பயல் என்று சில கெட்டவார்த்தைகள் சேர்த்து கேலி செய்தான். அத்தோடு விடாமல் காலையில் அவன் ஓனரும் அதனால தான் சின்ன வேலைக்கு அவ்வளவு நேரம் சொன்னதாகவும், பத்தாததுக்கு அந்த நாயக்கர் அடிக்கடி அவரிடம் மொக்கையப் போட்டு ஆட்டையப் போடும் சிகரெட், டீ வகையராக்களுக்கும் சேர்த்து இப்படி ஏதாவது தேற்றினால் தான் உண்டு என அதிக காசு என்னிடம் வாங்கியதையும் சொன்னான். எனக்கும் சானுக்கும் கடுங்கோபம், அந்த நாயக்கர் சொல்ற கதைகள கேட்டு இப்படி காமெடி டைமா இருந்திருக்கோமேனு கொலை வெரியுடன் இரவு வீடு திரும்பினோம். வீட்டு வாசலில் தனது நாற்காலிய போட்டு உட்கார்ந்து கொண்டு அடிக்கடி ம்.ம். வணக்கம்..வணக்கம் என்றவாரே அமர்ந்திருந்தார். அந்த ஆள்கிட்ட பேசினா கோபத்தில் எதாவது சொல்லிடுவோம் இப்பொ வேணாம்'னு நாங்களே எங்கள சமாதனப் படுத்திட்டு கிளம்பும் போது நாயக்கர் எங்கள கூப்பிட்டு 'பார்த்தீங்களாடா பசங்களா இந்த ஏரியாவில ஒருத்தன் கூட அய்யாக்கு மரியாதையா வணக்கம் வெக்காம போக மாட்டானுங்க..நான் வேணாம்'னாலும் விடாம நச்சு..நச்சு'ன்டு' என்று தனது பில்டப்பை ஆரம்பிச்சார். ஆனால் எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவ்வழியாக செல்லும் பலர் கையெடுத்து கும்பிட்டு சென்றனர், அதைவிட குழப்பம் என்னனா சிலர் செருப்பை எல்லாம் கலட்டிவிட்டு வணக்கம் சொல்றாங்க. ஓரு வேலை அந்த மெக்கானிக் கடை பையன் சும்மா அய்யா மேல உள்ள கடுப்பில கதை சொல்லிருப்பானோனு யோசிச்சுட்டே கடைக்கு போலாம்னு ரோட்டுக்கு வந்தோம். அங்கு பார்த்த காட்சி எங்களுக்கு குபீரென்று சிரிப்பலையை வரவைத்தது, நாயக்கரய்யா வீட்டு காம்பெளன்டு சுவற்றில் வாஸ்துப்படி ஒரு பெரிய விநாயகர் சிலை வைத்து இருக்கும் அன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்த விநாயகருக்கு நல்ல அலங்காரம் செஞ்சு வெச்சிருந்தாங்க நம்மாள் சரக்கப் போட்டுட்டு அழகா காம்பெளன்டு அருகில நாற்காலிய போட்டு உட்கார்ந்துட்டு வழியில போற வர்ற மக்கள் விநாயகனை கும்பிடுறதுக்கெல்லாம் பதில் வணக்கம் சொல்லிட்டுருந்தார். இரவெல்லாம் அன்று நடந்த லீலைகளை நினச்சு சிரிச்சுட்டே இருந்தோம். நம்மாளு நாயகன் நாயக்கர் இல்ல லொள்ளு சபா நாயக்கர் சரியான காமெடி பீசுங்கிறத உணர்ந்தோம்.
Posted by
ரெவுடி.
at
7:47 AM
1 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels:
அனுபவங்கள் / பல்ப்புகள்
மனிதவிலங்கு - (விவகாரமான பாம்பு பசை)
Friday, September 3, 2010
மனிதன் எப்பொழுதெல்லாம் வரம்பு மீரிய தீய செயல்களை செய்கிறானோ அப்போதெல்லாம் நாம் அவனை மிருகத்தனமாக நடக்கிறான் என்கிறோம். ஆனால் உண்மையில் நாம் மனிதத்தன்மையுடன் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் பல குணாதிசயங்கள் பரவலாக பல மிருகங்களிடம் உள்ளவை தான். சொல்லப் போனா நிஜத்தில் நிறைய காப்பி அடிச்சிருக்கோம் (வால்ரெவுடி:: ஜெயம்ரவி'யின் அண்ணண் ரீமேக் ராஜா மேட்டர் மனிதனின் பிறவி குணம் போல). தன் சகாக்கலிடம் உணவை பகிர்ந்து உண்பது, காயமடைந்த / முதிய உறுப்பினர்களுக்கு மற்ற விலங்குகள் உணவுத் தேடிக்கொண்டு வருவது, ஆபத்தில் சிக்கிய சக விலங்கை மீட்பதற்கானப் போராட்டத்தில் மற்ற விலங்குகள் உயிரை இழப்பது, அனாதையாகிவிட்ட குட்டிகளை தத்தெடுத்து வளர்ப்பது போன்ற வழக்கங்கள் பல்வேறு உயிரனங்களிடையே இருப்பது பலராலும் பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.
மனித சமுதாயத்தால் பெரிதும் பின்பற்றப்படும் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கு பொதுவான அடிப்படைக் காரணம் தன் துணையை மற்ற ஆண்களிடமிருந்துக் காவல் காக்கும் ஆணின் போக்கே அது. தன்னுடைய மரபணுக்களை வருங்கால சந்ததியினரிடையே பரப்பவேண்டும் என்ற உந்துதல்/இச்சை. தன் துணைக்குப் பிறக்கும் குழந்தை தன்னுடையது தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணின் தேவை இதிலிருந்தே எழுகிறது. இதற்கு துணையை மற்ற ஆண்களிடமிருந்துக் காப்பது தேவையாகிறது. இத்தகைய காவல் காக்கும் போக்கு பல்வேறு உயிரனங்களிடையே காணப்படுகிறது.
அப்படி ஒரு விசித்திரமான கில்மா சுபாவம் அப்ரிக்காவிலோ / அமேசான் காடுகளிலோ வாழும் ஒரு வகை பாம்புகளிடம் உள்ளது. என்ன இது குத்துமதிப்பா சொல்றேனு யோசிக்க கூடாது..நான் என்ன வெச்சுக்கிட்டேவா வஞ்ஞகம் பன்றேன்..எந்த காலத்திலயோ படிச்ச்து பாம்பு பேர், ஊர் எல்லாமா ஞாபகம் வச்சிருக்க முடியும், மேட்டர் கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கேன்..(வால்ரெவுடி:கோழி எங்கிருந்து வந்தா நமக்கென்ன குழம்பு ருசியா இருக்கா இல்லையாங்கிறது தானே முக்கியம் ). சரி விசயத்துக்கு வர்ரேன்..அந்த குறிப்பிட்ட இனப்பாம்புகளில் ஒரு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண் பாம்புகளுக்கு ஒரு பெண் பாம்பு தான் இருக்கும் (வால்ரெவுடி: ம்ம்..டெலிக்கேட் பொசிசன்.). இனவிருக்தி காலத்தில் அந்த ஒற்றை பெண் பாம்புடன் புணர்வதற்கு அந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் கடுமையா சண்டை போட்டுக்கொள்ளும் அதில் வெற்றி பெறும் ஆண் பாம்பே அந்த பெண் பாம்போடு உறவு கொள்ளும்...(வால்ரெவுடி: அடேங்கப்பா நம்ம பண்ணையார் பொண்ணுங்களே பறவாயில்ல போல ஒரெ ஒரு காளைய அடக்குனா போதும்.). இப்படி உயிரை பணயம் வெச்சு அடஞ்ச பரிசை தோற்றுப்போன மற்ற பாம்புகளும் பிறகு அனுபவிச்சுட கூடாது அத்தோட அந்த பெண் வயிற்றில் கருவுற்றால் தன் வாரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக உறவு கொண்டு முடித்ததும் ஆண் பாம்பு தன் உடலில் இருந்து வெளியேறும் ஒரு வினோதமான பசையை பெண் பாம்பின் உருப்பில் செலுத்தி அதன் துவாரத்தை அடைத்து விடும். (வால்ரெவுடி: என்ன ஒரு வில்லத்தனம்..). அந்த பாம்பின் பெண்ணுறுப்பு துவாரம் சகஜமாவதர்குள் இனப்பெருக்க காலம் முடிந்து விடும்.
நான் முன்னே சொன்ன பாலியல் ஒழுக்கவிதிகளின் காரணத்தின் அடிப்படையும் இது தான். ஆரம்பதில் மனிதனும் கஷ்டப்பட்டு சண்டையிட்டெல்லாம் தான் தன் துணையை பாதுகாக்கத்தான் (வால்ரெவுடி: பாவம் நம்மாளுக்கு தான் அப்படி ஒரு பசை சுரக்கிறதில்லையே..) காலப்போக்கில் அவன் கண்டுபிடித்த விசயம் தான் காதல், கல்யாணம், கட்டுப்பாடு கலாச்சாரம் எல்லாமே (வால்ரெவுடி: இவ்வளவு இம்சைகளுக்கு சிம்பிலா ஒரு நல்ல பசை கண்டு பிடிச்சுருக்கலாம் ). அந்த காலகட்டத்தில் இது ஒரு விதத்தில் சரியான தீர்வு தான். ஒருக் குழுவில் தகப்பனின் ஆதரவு இல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பல தீங்குகளை விளைவிக்கக்கூடும். மேலும் குழுவின் ஆண் உறுப்பினர்கள் துணையைக் நேரடியாகக் காவல் காப்பதிலேயே தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிட்டால் உணவு தேடுதல், குழுவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் ஆகியவைப் பாதிக்கப்படும். மொத்ததில் மனிதத்தன்மையும் மிருகத்தன்மையும் வேரில்லை..மனிதனும் ஒரு வித விலங்கினம் தான் (வால்ரெவுடி: man is a social animal என்று நம்ம பீட்ட்ர்ஸ் சும்மாவா சொல்லிருக்காஙக)
Posted by
ரெவுடி.
at
3:34 PM
0
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels:
பொதுவானவை
‘தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும்!’
GYM போறோம்ல்ல...இனி 6 பேக்ஸ் தான் இந்த உலகத்துல சிலர் மட்டும் ஆண்டவனோட செல்லப்புள்ளையா இருப்பாங்க...அப்படி ஒரு பாக்கியசாலி தான் நமது கரடி மாமா விஜய டி.ஆர். பின்ன என்னங்க சினிமாவிலும் நிஜத்திலும் நகைச்சுவை செஞ்சு மத்தவங்கள சிரிக்க வைச்க அவனவன் குட்டிகரணம் போட்டு போராடிட்டு இருக்கான் ஆனா நம்மாள பார்த்தாலே வயிறு புண்ணாகுற மாதிரி சிரிப்பு வரும்....அப்படி ஒரு வரம் வாங்கி வந்த நம்ம க.ம (கரடி மாமா) சமீபத்துல ஒரு பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியிலிருந்து நம்மை அறியாமல் தரையில் புரண்டு சிரிக்க வைக்கும் சில துளிகள்.. குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற ‘ஒரு தலைக் காதல்’ முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் ஜிம்முக்குப் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு'வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் ‘ஒருதலை ராகம்’. 2010-ல் ‘ஒருதலைக்காதல்’. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு நிக்கிறது யாரு… இந்த விஜயடி.ஆரு! அவனவன் காலையில் எழுந்து நீராடவே தயங்குறான். நான் 30 வருஷமா போராடுறேன். இது தலைக்கனம் இல்லை… தன்னம்பிக்கையின் இலக்கணம்!” – டி.ராஜேந்தர் பேசப் பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப்போல் அதிர்கிறதுஅறை! ‘ஒருதலைக் காதல்’ படத்தை பற்றி.....” “தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும். காதல் தான் கதை. மும்பை தாராவிதான் கதைக்களம். படத்தில் இசைக் கலைஞனா வர்றேன். படத்தில் ' A டு z' இசை மழை. ஏழுபாடல்களை செலெக்ட் பண்ணி இருக்கேன். அந்த ஏழு பாடல்கள்தான் இனிமேஇளைஞர்களோட சொத்து...... அடங்கொண்ணியா....அவருக்கு தலைக்கனமோ இல்லை தன்னம்பிக்கையோ ஆனா நம்ம (தமிழ் சினிமா ரசிகர்கள்) தலைவிதி மோசமா தான் இருக்கு. |
Posted by
ரெவுடி.
at
3:20 AM
0
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels:
நையாண்டி
இங்கெயும் வந்திடுச்சுல்ல........!
Thursday, September 2, 2010
என்னையும் மதிச்ச்ச்ச்சு.......! இங்க வந்து, இவன் என்ன கன்றாவிய கிறுக்கி இருக்கான்னு பார்க்க வரும் "அன்பு தமிழ் உள்ளங்களை என் இரு கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் ".
என்னடா எடுத்த எடுப்புலயே மம்மிய பார்த்த MLA மாதிரி பம்புற'னு பார்க்குறீங்களா, என்ன பண்றதுங்க வலைப்பதிவுக்கு புதுசா வந்திருக்கேன் மக்கள் ஆதரவு தேவையாச்சே..! இருந்தாலும் அமைதிப்படை அம்மாவாசை நமக்கு தூரத்து சொந்தம்'ங்கிறத லைட்டா சொல்லி வைக்கிறேன்.
நானும் இவ்வளவு காலமா சில நண்பர்களது வலைப்பதிவுகளை அப்அப்போ பார்ப்பேன் சரி 'பல் இருக்கவன் பக்கொடா சாப்பிடுறான்'னு நினைச்சு மணசை சமாதானப்படுத்திக்குவேன். ஆனாலும் சமீப காலமா உள்ளுக்குள்ள எதோ ஒரு குரல் கமாண்.. பொறுத்தது போதும் பொங்கி எழு ரெவுடி'னு கேட்டுடே இருக்கு அத ஆண்டவனோட கட்டளையா எடுத்துக்குறேன்........
டேய் நிருத்துடா..கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா கேடிவி'ல கே.ஆர் விஜயா பிட் ஓடிட்டு இருக்குனு சொல்லுவயேனு நீங்க பாராட்டுறது கேட்குது இப்பொதைக்கு நிறுத்திக்கிறேன் கூடிய விரைவில் சில சங்கதிகளை யோசிச்சோ அல்லது சேகரிச்சுட்டோ (திருடிட்டுனு கரெக்டா படிச்சாலும் மறந்துடுங்க்) வந்து சந்திக்கிறேன்.
என்னடா எடுத்த எடுப்புலயே மம்மிய பார்த்த MLA மாதிரி பம்புற'னு பார்க்குறீங்களா, என்ன பண்றதுங்க வலைப்பதிவுக்கு புதுசா வந்திருக்கேன் மக்கள் ஆதரவு தேவையாச்சே..! இருந்தாலும் அமைதிப்படை அம்மாவாசை நமக்கு தூரத்து சொந்தம்'ங்கிறத லைட்டா சொல்லி வைக்கிறேன்.
நானும் இவ்வளவு காலமா சில நண்பர்களது வலைப்பதிவுகளை அப்அப்போ பார்ப்பேன் சரி 'பல் இருக்கவன் பக்கொடா சாப்பிடுறான்'னு நினைச்சு மணசை சமாதானப்படுத்திக்குவேன். ஆனாலும் சமீப காலமா உள்ளுக்குள்ள எதோ ஒரு குரல் கமாண்.. பொறுத்தது போதும் பொங்கி எழு ரெவுடி'னு கேட்டுடே இருக்கு அத ஆண்டவனோட கட்டளையா எடுத்துக்குறேன்........
டேய் நிருத்துடா..கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா கேடிவி'ல கே.ஆர் விஜயா பிட் ஓடிட்டு இருக்குனு சொல்லுவயேனு நீங்க பாராட்டுறது கேட்குது இப்பொதைக்கு நிறுத்திக்கிறேன் கூடிய விரைவில் சில சங்கதிகளை யோசிச்சோ அல்லது சேகரிச்சுட்டோ (திருடிட்டுனு கரெக்டா படிச்சாலும் மறந்துடுங்க்) வந்து சந்திக்கிறேன்.
Posted by
ரெவுடி.
at
6:48 AM
5
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels:
பொதுவானவை
Subscribe to:
Posts (Atom)


