‘தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும்!’

Friday, September 3, 2010


GYM போறோம்ல்ல...இனி 6 பேக்ஸ் தான்
 
இந்த உலகத்துல சிலர் மட்டும் ஆண்டவனோட செல்லப்புள்ளையா இருப்பாங்க...அப்படி ஒரு பாக்கியசாலி தான் நமது கரடி மாமா விஜய டி.ஆர்.  பின்ன என்னங்க சினிமாவிலும் நிஜத்திலும் நகைச்சுவை செஞ்சு மத்தவங்கள சிரிக்க வைச்க அவனவன் குட்டிகரணம் போட்டு போராடிட்டு இருக்கான் ஆனா நம்மாள பார்த்தாலே வயிறு புண்ணாகுற மாதிரி சிரிப்பு வரும்....அப்படி ஒரு வரம் வாங்கி வந்த நம்ம க.ம (கரடி மாமா) சமீபத்துல ஒரு பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியிலிருந்து நம்மை அறியாமல் தரையில் புரண்டு சிரிக்க வைக்கும் சில துளிகள்..

குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிறஒரு தலைக் காதல்முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் ஜிம்முக்குப் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு'வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல்ஒருதலை ராகம்’. 2010-ல்ஒருதலைக்காதல்’. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு நிக்கிறது யாருஇந்த விஜயடி.ஆரு! அவனவன் காலையில் எழுந்து நீராடவே தயங்குறான். நான் 30 வருஷமா போராடுறேன். இது தலைக்கனம் இல்லைதன்னம்பிக்கையின் இலக்கணம்!” – டி.ராஜேந்தர் பேசப் பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப்போல் அதிர்கிறதுஅறை!

ஒருதலைக் காதல்’ படத்தை பற்றி.....”
 தமிழ்நாடே மிரளும்காதல்ல உருளும். காதல் தான் கதை. மும்பை தாராவிதான் கதைக்களம். படத்தில் இசைக் கலைஞனா வர்றேன். படத்தில் ' A டு z' இசை மழை. ஏழுபாடல்களை செலெக்ட் பண்ணி இருக்கேன். அந்த ஏழு பாடல்கள்தான் இனிமேஇளைஞர்களோட சொத்து......

அடங்கொண்ணியா....அவருக்கு தலைக்கனமோ இல்லை தன்னம்பிக்கையோ ஆனா நம்ம (தமிழ் சினிமா ரசிகர்கள்) தலைவிதி மோசமா தான் இருக்கு.



0 comments:

Post a Comment