மனிதவிலங்கு - (விவகாரமான பாம்பு பசை)

Friday, September 3, 2010


மனிதன் எப்பொழுதெல்லாம் வரம்பு மீரிய தீய செயல்களை செய்கிறானோ அப்போதெல்லாம் நாம் அவனை மிருகத்தனமாக நடக்கிறான் என்கிறோம். ஆனால் உண்மையில் நாம் மனிதத்தன்மையுடன் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் பல குணாதிசயங்கள் பரவலாக பல மிருகங்களிடம் உள்ளவை தான். சொல்லப் போனா நிஜத்தில் நிறைய காப்பி அடிச்சிருக்கோம் (வால்ரெவுடி:: ஜெயம்ரவி'யின் அண்ணண் ரீமேக் ராஜா மேட்டர்  மனிதனின் பிறவி குணம் போல). தன் சகாக்கலிடம் உணவை பகிர்ந்து உண்பது, காயமடைந்த / முதிய உறுப்பினர்களுக்கு மற்ற விலங்குகள் உணவுத் தேடிக்கொண்டு வருவது, ஆபத்தில் சிக்கிய சக விலங்கை மீட்பதற்கானப் போராட்டத்தில் மற்ற விலங்குகள் உயிரை இழப்பது, அனாதையாகிவிட்ட குட்டிகளை தத்தெடுத்து வளர்ப்பது போன்ற வழக்கங்கள் பல்வேறு உயிரனங்களிடையே இருப்பது பலராலும் பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.

 மனித சமுதாயத்தால் பெரிதும் பின்பற்றப்படும் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கு பொதுவான அடிப்படைக் காரணம் தன் துணையை மற்ற ஆண்களிடமிருந்துக் காவல் காக்கும் ஆணின் போக்கே அது. தன்னுடைய மரபணுக்களை வருங்கால சந்ததியினரிடையே பரப்பவேண்டும் என்ற உந்துதல்/இச்சை. தன் துணைக்குப் பிறக்கும் குழந்தை தன்னுடையது தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணின் தேவை இதிலிருந்தே எழுகிறது. இதற்கு துணையை மற்ற ஆண்களிடமிருந்துக் காப்பது தேவையாகிறது. இத்தகைய காவல் காக்கும் போக்கு பல்வேறு உயிரனங்களிடையே
காணப்படுகிறது.


அப்படி ஒரு விசித்திரமான கில்மா சுபாவம் அப்ரிக்காவிலோ / அமேசான் காடுகளிலோ வாழும் ஒரு வகை பாம்புகளிடம் உள்ளது. என்ன இது குத்துமதிப்பா சொல்றேனு யோசிக்க கூடாது..நான் என்ன வெச்சுக்கிட்டேவா வஞ்ஞகம் பன்றேன்..எந்த காலத்திலயோ படிச்ச்து பாம்பு பேர், ஊர் எல்லாமா ஞாபகம் வச்சிருக்க முடியும், மேட்டர் கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கேன்..(
வால்ரெவுடி:கோழி எங்கிருந்து வந்தா நமக்கென்ன குழம்பு ருசியா இருக்கா இல்லையாங்கிறது தானே முக்கியம் ). சரி விசயத்துக்கு வர்ரேன்..அந்த குறிப்பிட்ட இனப்பாம்புகளில் ஒரு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண் பாம்புகளுக்கு ஒரு பெண் பாம்பு தான் இருக்கும் (வால்ரெவுடி: ம்ம்..டெலிக்கேட் பொசிசன்.). இனவிருக்தி காலத்தில் அந்த ஒற்றை பெண் பாம்புடன் புணர்வதற்கு அந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் கடுமையா சண்டை போட்டுக்கொள்ளும் அதில் வெற்றி பெறும் ஆண் பாம்பே அந்த பெண் பாம்போடு உறவு கொள்ளும்...(வால்ரெவுடி: அடேங்கப்பா நம்ம பண்ணையார் பொண்ணுங்களே பறவாயில்ல போல ஒரெ ஒரு காளைய அடக்குனா போதும்.). இப்படி உயிரை பணயம் வெச்சு அடஞ்ச பரிசை தோற்றுப்போன மற்ற பாம்புகளும் பிறகு அனுபவிச்சுட கூடாது அத்தோட அந்த பெண் வயிற்றில் கருவுற்றால் தன் வாரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக உறவு கொண்டு முடித்ததும் ஆண் பாம்பு தன் உடலில் இருந்து வெளியேறும் ஒரு வினோதமான பசையை பெண் பாம்பின் உருப்பில் செலுத்தி அதன் துவாரத்தை அடைத்து விடும். (வால்ரெவுடி: என்ன ஒரு வில்லத்தனம்..). அந்த பாம்பின் பெண்ணுறுப்பு துவாரம் சகஜமாவதர்குள் இனப்பெருக்க காலம் முடிந்து விடும்.  

நான் முன்னே சொன்ன பாலியல் ஒழுக்கவிதிகளின் காரணத்தின் அடிப்படையும் இது தான். ஆரம்பதில் மனிதனும் கஷ்டப்பட்டு சண்டையிட்டெல்லாம் தான் தன் துணையை பாதுகாக்கத்தான் (வால்ரெவுடி: பாவம் நம்மாளுக்கு தான் அப்படி ஒரு பசை சுரக்கிறதில்லையே..காலப்போக்கில் அவன் கண்டுபிடித்த விசயம் தான் காதல், கல்யாணம், கட்டுப்பாடு கலாச்சாரம் எல்லாமே (வால்ரெவுடி: இவ்வளவு இம்சைகளுக்கு சிம்பிலா ஒரு நல்ல பசை கண்டு பிடிச்சுருக்கலாம் ). அந்த காலகட்டத்தில் இது ஒரு விதத்தில் சரியான தீர்வு தான். ஒருக் குழுவில் தகப்பனின் ஆதரவு இல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பல தீங்குகளை விளைவிக்கக்கூடும். மேலும் குழுவின் ஆண் உறுப்பினர்கள் துணையைக் நேரடியாகக் காவல் காப்பதிலேயே தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிட்டால் உணவு தேடுதல், குழுவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் ஆகியவைப் பாதிக்கப்படும். மொத்ததில் மனிதத்தன்மையும் மிருகத்தன்மையும் வேரில்லை..மனிதனும் ஒரு வித விலங்கினம் தான் (வால்ரெவுடி: man is a social animal என்று நம்ம பீட்ட்ர்ஸ் சும்மாவா சொல்லிருக்காஙக)

0 comments:

Post a Comment